• May 05 2024

ராமர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!samugammedia

Tharun / Jan 22nd 2024, 9:02 pm
image

Advertisement

பல்வேறு சிறப்பம்சங்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று (22) மதியம் 12:20 க்கு கோலாகலமாக இடம்பெற்றது. ராமர் பிறந்து வளர்ந்த இடமாக, வரலாறு போற்றும் அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பதற்கான பணிகள் 2020ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் 70 ஏக்கர் பரப்பில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளை கொண்டதாக 380 அடி நீளத்திலும் 250 அடி அகலத்திலும் 161 முடி உயரத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



கோவில் பிரதான கருவறையில் ராமர் சிலையும் முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும். கோயிலின் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலத்தடி ஈரப்பதத்திலிருந்து கோயிலை பாதுகாக்க கிரனைட் பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளமை இதன் முக்கிய அம்சம் ஆகும். 


பிராண பிரதிஸ்டை  இன்று (22) இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அத்துடன் 7000 க்கும் மேற்பட்ட பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு  அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 



அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக இலங்கை நுவரெலியா சீதாஎலியா எனுமிடத்திலிருந்து புனித கல் ஒன்று அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடி தமிழகத்தின் அனைத்து வழிபாட்டுத்தளங்களுக்கும் சென்று விசேட பூஜைகள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராமர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட அயோத்தி.samugammedia பல்வேறு சிறப்பம்சங்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று (22) மதியம் 12:20 க்கு கோலாகலமாக இடம்பெற்றது. ராமர் பிறந்து வளர்ந்த இடமாக, வரலாறு போற்றும் அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பதற்கான பணிகள் 2020ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் 70 ஏக்கர் பரப்பில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளை கொண்டதாக 380 அடி நீளத்திலும் 250 அடி அகலத்திலும் 161 முடி உயரத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கோவில் பிரதான கருவறையில் ராமர் சிலையும் முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும். கோயிலின் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலத்தடி ஈரப்பதத்திலிருந்து கோயிலை பாதுகாக்க கிரனைட் பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளமை இதன் முக்கிய அம்சம் ஆகும். பிராண பிரதிஸ்டை  இன்று (22) இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அத்துடன் 7000 க்கும் மேற்பட்ட பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு  அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக இலங்கை நுவரெலியா சீதாஎலியா எனுமிடத்திலிருந்து புனித கல் ஒன்று அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடி தமிழகத்தின் அனைத்து வழிபாட்டுத்தளங்களுக்கும் சென்று விசேட பூஜைகள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement