• Sep 20 2024

குருந்தூர்மலை ஆர்ப்பாட்டம்; ரவிகரன், மயூரன் கைதுசெய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு! samugammedia

Chithra / May 25th 2023, 2:41 pm
image

Advertisement

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டு தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக  தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டசெயலாளருமான துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் வழக்கிலக்கம் பி1053/22 என்னும் வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி சரவணராஜா முன்னிலையில் 25.05.2023 இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கினை ஆராய்ந்த நீதவான் குறித்த வழக்கினை எதிர்வரும் 2023.10.19 திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணையின்போது ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோருக்கு ஆதரவாக நீதிமன்றிற்கு வருகைதந்த அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குருந்தூர்மலை ஆர்ப்பாட்டம்; ரவிகரன், மயூரன் கைதுசெய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு samugammedia முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டு தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக  தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டசெயலாளருமான துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.இந் நிலையில் வழக்கிலக்கம் பி1053/22 என்னும் வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி சரவணராஜா முன்னிலையில் 25.05.2023 இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கினை ஆராய்ந்த நீதவான் குறித்த வழக்கினை எதிர்வரும் 2023.10.19 திகதிக்கு தவணையிட்டுள்ளார்.குறித்த வழக்கு விசாரணையின்போது ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோருக்கு ஆதரவாக நீதிமன்றிற்கு வருகைதந்த அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement