• Sep 19 2024

பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு! samugammedia

Tamil nila / May 25th 2023, 2:42 pm
image

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமத்தில் 1990ம் ஆண்டு  ஒருவர் வீடு கட்ட பள்ளம் தோன்றிய போது சுமார் முக்கால் அடி உயரம் உள்ள புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு அத்தெருவில் உள்ள பஜனை திருக்கோயிலில் வைத்து இன்று வரை அக்கிராம மக்களால் கிருஷ்ணனுடன் ,புத்தரையும் இன்று வரை வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓரு ஆண்டுக்கு முன்பு தற்போதைய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரான பொற்கொடி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புத்தர் சிலையை பாதுகாப்பாக வைக்க புத்த விகார் ஒன்று அப்பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் சுற்றுலாத்துறை வளர்ச்சி துறை நிர்வாக இயக்குனர் சந்தீப்நத்தூரி, ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் கிராமத்திற்கு சென்று அச்சிலையை பார்வையிட்டு அப்பகுதியில் புத்தர் பீடம் என அழைக்கப்படும் ஊத்ததிகார் அமைக்க முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட போது செய்தியாளரிடம் அப்பகுதியில் பூத்த விகார் அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

இதனை அறிந்த தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை சேர்ந்த புத்த பிக்குகள் 8 பேர் அக்கிராமத்திற்கு வந்து புத்தர் போதனைகள் குறித்து விளக்கம் அளித்தும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

இதுகுறித்து புத்த பிக்கு புத்தபிரகாஷ் கூறுகையில் இந்த சிலை பார்க்கையில் 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் புத்த கொள்கைகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது நாட்டில் நடக்கும் தீமைகள் அனைத்தும் மறைய மீண்டும் புத்தரின் போதனைகளை பொதுமக்கள் அறிந்து கொண்டு அவ்வாழ்வினை மேற்கொண்டால் அமைதி வளம் உள்ளிட்டவை உண்டாகும் எனவே தமிழக அரசு இந்த கிராமத்தில் புத்தர் பீடம் அமைத்து புத்தரின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் , ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் புத்த பிக்குகள், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு samugammedia காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமத்தில் 1990ம் ஆண்டு  ஒருவர் வீடு கட்ட பள்ளம் தோன்றிய போது சுமார் முக்கால் அடி உயரம் உள்ள புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு அத்தெருவில் உள்ள பஜனை திருக்கோயிலில் வைத்து இன்று வரை அக்கிராம மக்களால் கிருஷ்ணனுடன் ,புத்தரையும் இன்று வரை வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ஓரு ஆண்டுக்கு முன்பு தற்போதைய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரான பொற்கொடி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புத்தர் சிலையை பாதுகாப்பாக வைக்க புத்த விகார் ஒன்று அப்பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.அதன் அடிப்படையில் கடந்த மாதம் சுற்றுலாத்துறை வளர்ச்சி துறை நிர்வாக இயக்குனர் சந்தீப்நத்தூரி, ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் கிராமத்திற்கு சென்று அச்சிலையை பார்வையிட்டு அப்பகுதியில் புத்தர் பீடம் என அழைக்கப்படும் ஊத்ததிகார் அமைக்க முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட போது செய்தியாளரிடம் அப்பகுதியில் பூத்த விகார் அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.இதனை அறிந்த தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை சேர்ந்த புத்த பிக்குகள் 8 பேர் அக்கிராமத்திற்கு வந்து புத்தர் போதனைகள் குறித்து விளக்கம் அளித்தும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.இதுகுறித்து புத்த பிக்கு புத்தபிரகாஷ் கூறுகையில் இந்த சிலை பார்க்கையில் 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் புத்த கொள்கைகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.தற்போது நாட்டில் நடக்கும் தீமைகள் அனைத்தும் மறைய மீண்டும் புத்தரின் போதனைகளை பொதுமக்கள் அறிந்து கொண்டு அவ்வாழ்வினை மேற்கொண்டால் அமைதி வளம் உள்ளிட்டவை உண்டாகும் எனவே தமிழக அரசு இந்த கிராமத்தில் புத்தர் பீடம் அமைத்து புத்தரின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் , ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் புத்த பிக்குகள், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement