குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 6 ஆளில்லா வானூர்திகளை கடந்த 24 மணிநேரத்திற்குள் சுட்டு வீழ்த்தியதாக குவைத் தேசிய காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தேசிய படையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் இந்த வானூர்திகள் அடையாளம் காணப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும், முக்கிய மூலோபாயக் கட்டமைப்புகளை காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரிகேடியர் ஜெனரல் ஜடான் ஃபாதெல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இராணுவம், உள்துறை அமைச்சு மற்றும் தீயணைப்புப் படை ஆகியன இணைந்து, எந்நேரமும் முழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் எரிபொருள் தொட்டி மீது ட்ரோன் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் குவைத் மீதான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 6 ட்ரோன்கள் தகர்ப்பு- குவைத் இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 6 ஆளில்லா வானூர்திகளை கடந்த 24 மணிநேரத்திற்குள் சுட்டு வீழ்த்தியதாக குவைத் தேசிய காவல்துறை அறிவித்துள்ளது.அதன்படி, தேசிய படையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் இந்த வானூர்திகள் அடையாளம் காணப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும், முக்கிய மூலோபாயக் கட்டமைப்புகளை காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரிகேடியர் ஜெனரல் ஜடான் ஃபாதெல் தெரிவித்துள்ளார்.அத்துடன், இராணுவம், உள்துறை அமைச்சு மற்றும் தீயணைப்புப் படை ஆகியன இணைந்து, எந்நேரமும் முழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே, குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் எரிபொருள் தொட்டி மீது ட்ரோன் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.இவ்வாறான நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் குவைத் மீதான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.