• Nov 10 2024

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்களால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை...! சபையில் அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டு...!

Sharmi / Jul 9th 2024, 12:42 pm
image

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய (09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சில குழுக்கள் கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தன.

இதனால் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. மேல்மாகாணத்தில்தான் இந்த ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மேல்மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சை நடாத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பாடவாரியாக ஆட்சேர்ப்பு நடைபெறும் போது சிலர் கைவிடப்பட்டுள்ளனர்.

ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பாக தீர்மானங்களை எடுத்தோம். மேல் மாகாணத்தில் வெற்றிடங்களை விட பட்டதாரிகளே அதிகம். அதனால்தான் பரீட்சை நடத்தப்பட்டது. ஆனால் ஏனைய மாகாணங்களில் அவ்வாறான நிலை இல்லை.

நான் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது பரீட்சைகளை நடாத்தி பட்டதாரிகளை உள்வாங்கினோம். அடுத்து பட்டதாரிகள் தாமாகவே முன்வந்து பாடசாலைகளில் கற்பிக்க வந்தனர். அவர்கள் அதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டனர்.

எனவே, மேல் மாகாணத்தின் பிரச்சினை பாரியளவில் தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டு பிரதேச செயலக மட்டத்தில் அவர்களின் தகவல்கள் பெறப்பட்டன. இது தொடர்பாக நான் அமைச்சர் சுசிலிடம் பேசி 45 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  (ஐ.ம.ச) - கௌரவ சபாநாயகர் அவர்களே, பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் பட்டதாரிகளைப் பற்றிப் பேசியதைப் போன்று பட்டதாரிகளின் முழுப் பிரச்சினையையும் நாம் பேச வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் வழங்கப்படும் போது பிரதேச செயலக அலுவலகங்களில் ஒரு நாற்காலியில் இரண்டு மூன்று பேர் அமர்ந்தனர். அப்போது அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனால், 17  இலட்சம் அரச ஊழியர்களாக அதிகரித்துள்ளனர்.

எமது நாட்டில் உள்ள 10 இலட்சம் அரச ஊழியர்களைக் கொண்டு இந்த தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என முகாமைத்துவ சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகின்றார்.

அதிகாரம் கிடைத்தால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வழங்குவாரா? இல்லையா? என்பதை எதிர்க்கட்சித் தலைவரிடம் இருந்து அறிய விரும்புகிறேன். இது பற்றி தேர்தல் பிரகடனத்தில் இடம்பெறுமா? இல்லையென்றால், அது பற்றி இந்த நாடாளுமன்றத்தில் தெரிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்களால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை. சபையில் அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டு. பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இன்றைய (09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சில குழுக்கள் கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தன. இதனால் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. மேல்மாகாணத்தில்தான் இந்த ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மேல்மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சை நடாத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பாடவாரியாக ஆட்சேர்ப்பு நடைபெறும் போது சிலர் கைவிடப்பட்டுள்ளனர்.ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பாக தீர்மானங்களை எடுத்தோம். மேல் மாகாணத்தில் வெற்றிடங்களை விட பட்டதாரிகளே அதிகம். அதனால்தான் பரீட்சை நடத்தப்பட்டது. ஆனால் ஏனைய மாகாணங்களில் அவ்வாறான நிலை இல்லை.நான் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது பரீட்சைகளை நடாத்தி பட்டதாரிகளை உள்வாங்கினோம். அடுத்து பட்டதாரிகள் தாமாகவே முன்வந்து பாடசாலைகளில் கற்பிக்க வந்தனர். அவர்கள் அதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டனர். எனவே, மேல் மாகாணத்தின் பிரச்சினை பாரியளவில் தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டு பிரதேச செயலக மட்டத்தில் அவர்களின் தகவல்கள் பெறப்பட்டன. இது தொடர்பாக நான் அமைச்சர் சுசிலிடம் பேசி 45 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  (ஐ.ம.ச) - கௌரவ சபாநாயகர் அவர்களே, பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் பட்டதாரிகளைப் பற்றிப் பேசியதைப் போன்று பட்டதாரிகளின் முழுப் பிரச்சினையையும் நாம் பேச வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த நியமனங்கள் வழங்கப்படும் போது பிரதேச செயலக அலுவலகங்களில் ஒரு நாற்காலியில் இரண்டு மூன்று பேர் அமர்ந்தனர். அப்போது அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனால், 17  இலட்சம் அரச ஊழியர்களாக அதிகரித்துள்ளனர்.எமது நாட்டில் உள்ள 10 இலட்சம் அரச ஊழியர்களைக் கொண்டு இந்த தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என முகாமைத்துவ சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகின்றார். அதிகாரம் கிடைத்தால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வழங்குவாரா இல்லையா என்பதை எதிர்க்கட்சித் தலைவரிடம் இருந்து அறிய விரும்புகிறேன். இது பற்றி தேர்தல் பிரகடனத்தில் இடம்பெறுமா இல்லையென்றால், அது பற்றி இந்த நாடாளுமன்றத்தில் தெரிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement