• Nov 25 2024

இலட்சங்களில் புரளும் மத்திய வங்கி ஊழியர்கள் - திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் காட்டம்..!samugammedia

mathuri / Feb 23rd 2024, 7:00 am
image

மத்திய வங்கி ஊழியர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அரச ஊழியர்களும் இதுபோன்ற சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்தால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்று திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, நேற்றையதினம் சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றதையடுத்து, தனது கருத்துக்களை வெளியிடும் போதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் போது மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது அனைத்து இலங்கையர்களுக்கும் இழைக்கப்பட்ட பாரிய அநீதி ஆகும்.

நாட்டில் சாதாரண மக்கள் துன்பப்படுகின்றார்கள் என்றால்  அனைத்து மட்டத்திலும் உள்ளவர்களும் துன்பப்பட வேண்டும்.  சாதாரண மக்கள் மாத்திரம் துன்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அநீதி குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மாத்திரமே இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து  ஏனைய அரச ஊழியர்களும் கோரிக்கைகளை முன்வைத்தால் பெரும் பிரச்சினை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் அது நியாயமற்ற செயலாகும். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய வங்கி ஆளுநரின் இந்த தீர்மானம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.

இந்த அநீதியான செயலுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்கள் அணி திரள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.



இலட்சங்களில் புரளும் மத்திய வங்கி ஊழியர்கள் - திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் காட்டம்.samugammedia மத்திய வங்கி ஊழியர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அரச ஊழியர்களும் இதுபோன்ற சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்தால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்று திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, நேற்றையதினம் சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றதையடுத்து, தனது கருத்துக்களை வெளியிடும் போதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் போது மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது அனைத்து இலங்கையர்களுக்கும் இழைக்கப்பட்ட பாரிய அநீதி ஆகும்.நாட்டில் சாதாரண மக்கள் துன்பப்படுகின்றார்கள் என்றால்  அனைத்து மட்டத்திலும் உள்ளவர்களும் துன்பப்பட வேண்டும்.  சாதாரண மக்கள் மாத்திரம் துன்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அநீதி குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மாத்திரமே இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து  ஏனைய அரச ஊழியர்களும் கோரிக்கைகளை முன்வைத்தால் பெரும் பிரச்சினை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் அது நியாயமற்ற செயலாகும். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய வங்கி ஆளுநரின் இந்த தீர்மானம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.இந்த அநீதியான செயலுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்கள் அணி திரள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement