யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலருக்கு எதிர்ப்புக் கடிதம் வழங்கப்பட்ட போதிலும், அவர் மௌனமாக இருப்பதாக அந்தப் பகுதி மக்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு மற்றும் குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் இரகசியமாக நிலங்களை அளவிடும் முயற்சி இடம்பெற்றுள்ளது.
இதனை அறிந்து அந்தப் பகுதியில் குவிந்த மக்கள், தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது நிலங்களை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, மக்களின் போராட்டத்தையடுத்து, நில அளவையைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.
யாழின் முக்கிய பகுதியில் காணி சுவீகரிப்பு முயற்சி – மக்களின் போராட்டத்தால் முறியடிப்பு. யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலருக்கு எதிர்ப்புக் கடிதம் வழங்கப்பட்ட போதிலும், அவர் மௌனமாக இருப்பதாக அந்தப் பகுதி மக்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று மீண்டும் குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு மற்றும் குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் இரகசியமாக நிலங்களை அளவிடும் முயற்சி இடம்பெற்றுள்ளது.இதனை அறிந்து அந்தப் பகுதியில் குவிந்த மக்கள், தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது நிலங்களை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனவே, மக்களின் போராட்டத்தையடுத்து, நில அளவையைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.