• Nov 23 2024

புலிகளுடனான போரில் பாதிப்படைந்த இராணுவத்தினருக்கு காணிகள்..! ரணில் அறிவிப்பு

Chithra / May 15th 2024, 11:39 am
image

 

விடுதலைப் புலிகளுடான போரில் உயிரிழந்த, காணாமல் போன மற்றும் அங்கவீனமடைந்த இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க  உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த இராணுவத்தினர் ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது தற்போதைக்கு சேவையில் இருந்தாலும் சரி காணிகளைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையோராகக் கருதப்படுவா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவதற்கான செயற்பாடுகளை துரித கதியில் செயற்படுத்த அதிபர் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது, நேற்றைய தினம் (14) நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சிவில் பாதுகாப்புப் படை, காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை, முப்படைகளில் பணியாற்றி போரின் போது உயிரிழந்தவர்கள் அத்தோடு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அங்கவீனமடைந்தோர் இதற்கான தகுதியுடையோராக வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுடனான போரில் பாதிப்படைந்த இராணுவத்தினருக்கு காணிகள். ரணில் அறிவிப்பு  விடுதலைப் புலிகளுடான போரில் உயிரிழந்த, காணாமல் போன மற்றும் அங்கவீனமடைந்த இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க  உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில், அந்த இராணுவத்தினர் ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது தற்போதைக்கு சேவையில் இருந்தாலும் சரி காணிகளைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையோராகக் கருதப்படுவா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, இந்த இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவதற்கான செயற்பாடுகளை துரித கதியில் செயற்படுத்த அதிபர் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த குழுவானது, நேற்றைய தினம் (14) நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், சிவில் பாதுகாப்புப் படை, காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை, முப்படைகளில் பணியாற்றி போரின் போது உயிரிழந்தவர்கள் அத்தோடு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அங்கவீனமடைந்தோர் இதற்கான தகுதியுடையோராக வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement