• Nov 26 2024

தாழ் வளிமண்டலத்தில் கொந்தளிப்பு: நாடு முழுவதும் மழை தொடரும் - 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Tamil nila / Aug 16th 2024, 9:10 pm
image

இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டின் தென்மேல் பகுதிகளில் கனமழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் குறித்த பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, மதுகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




தாழ் வளிமண்டலத்தில் கொந்தளிப்பு: நாடு முழுவதும் மழை தொடரும் - 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டின் தென்மேல் பகுதிகளில் கனமழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் குறித்த பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.இதேவேளை நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காலி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, மதுகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement