நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால கொண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமைவிக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த மலர் கண்காட்சியை நாளையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளையும், பார்வையளர்களை மிகுதியாய் கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விக்டோரியா பூங்கா முழுவதும் புதிதாக நடப்பட்ட பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.
மலர் கண்காட்சி ஆரம்பித்ததையடுத்து விக்டோரியா பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளனர்.
இவ்வாறு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் மூலம் அலங்காரம் செய்துள்ள பறவைகள் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்தும் வருகின்றனர்.
நுவரெலியாவில் ஏப்ரல் மாதம் முழுவதும் வசந்த காலம் என்பதால் எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்
நுவரெலியாவில் கண்களை கவரும் பூக்கள்; ஆரம்பமான கண்காட்சி நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால கொண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமைவிக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.குறித்த மலர் கண்காட்சியை நாளையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதில் குழந்தைகளையும், பார்வையளர்களை மிகுதியாய் கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.விக்டோரியா பூங்கா முழுவதும் புதிதாக நடப்பட்ட பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.மலர் கண்காட்சி ஆரம்பித்ததையடுத்து விக்டோரியா பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளனர்.இவ்வாறு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் மூலம் அலங்காரம் செய்துள்ள பறவைகள் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்தும் வருகின்றனர். நுவரெலியாவில் ஏப்ரல் மாதம் முழுவதும் வசந்த காலம் என்பதால் எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்