• Apr 02 2025

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

Chithra / Nov 19th 2024, 11:27 am
image

 

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள ஒன்பது பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு இன்று இரவு 9.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் வளல்லவிட்ட, மற்றும் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிடிய மற்றும் வரகாபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலக பிரிவுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் அலவ்வ மற்றும் நாரம்மல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவிப்பும் இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொட, இம்புல்பே, ஓபநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை  நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள ஒன்பது பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு இன்று இரவு 9.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் வளல்லவிட்ட, மற்றும் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிடிய மற்றும் வரகாபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலக பிரிவுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.குருநாகல் மாவட்டத்தில் அலவ்வ மற்றும் நாரம்மல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவிப்பும் இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொட, இம்புல்பே, ஓபநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement