• Sep 29 2024

இலங்கையில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! samugammedia

Tamil nila / Dec 10th 2023, 8:46 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத்த மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல அம்பன்கங்க கோரலே மற்றும் லக்கல பல்லேகம ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த. இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மற்றும் பண்டாரவளை பிரதான வீதியில் மாலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை (10ஆம் திகதி) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை. samugammedia நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத்த மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல அம்பன்கங்க கோரலே மற்றும் லக்கல பல்லேகம ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த. இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மற்றும் பண்டாரவளை பிரதான வீதியில் மாலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை (10ஆம் திகதி) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement