கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது..
இன்று பிற்பகல் 3.30 வரையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மண்சரிவு காரணமாக கண்டி மஹியங்கனை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மண்சரிவு காரணமாக பதுளை - மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதுளை ஆறாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு - போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 3.30 வரையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை மண்சரிவு காரணமாக கண்டி மஹியங்கனை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.உன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் மண்சரிவு காரணமாக பதுளை - மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பதுளை ஆறாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.