• Sep 20 2024

516 சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த மிகப் பெரிய கப்பல்

Chithra / Dec 26th 2022, 3:31 pm
image

Advertisement

கடந்த 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த (MV Silver Spirit) என்ற பயணிகள் சொகுசு கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் 336 பயணிகள் மற்றும் 404 பணியாளர்களும் வந்தனர்.

இதேவேளை இந்த கப்பலின் வருகையால் 21 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கும் என திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சுற்றுலா பயணிகள் திருகோணமலை, சிகிரியா, தம்புள்ளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளதோடு அவர்கள் நாளை அதிகாலை தாய்லாந்து, நோக்கி பயணிப்பார்கள். தொடர்ந்து மலேஷியா, சிங்கப்பூருக்கு அந்த சுற்றுலா பயணிகள் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

516 சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த மிகப் பெரிய கப்பல் கடந்த 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த (MV Silver Spirit) என்ற பயணிகள் சொகுசு கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இன்று (திங்கட்கிழமை) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் 336 பயணிகள் மற்றும் 404 பணியாளர்களும் வந்தனர்.இதேவேளை இந்த கப்பலின் வருகையால் 21 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கும் என திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த சுற்றுலா பயணிகள் திருகோணமலை, சிகிரியா, தம்புள்ளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளதோடு அவர்கள் நாளை அதிகாலை தாய்லாந்து, நோக்கி பயணிப்பார்கள். தொடர்ந்து மலேஷியா, சிங்கப்பூருக்கு அந்த சுற்றுலா பயணிகள் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement