• Dec 01 2024

லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய வாகனம் முற்றுகை - பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள்

Chithra / Dec 1st 2024, 4:03 pm
image

கடந்த ஒரு மாத காலமாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் முற்றாக தடைப்பட்ட நிலையில் இன்று விநியோகம் இடம்பெறுவதனால் மக்கள் எரிவாயுவை வாங்குவதற்காக அலைமோதியுள்ளனர். 

அதன்படி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

அத்தோடு  மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து எரிபொருள் நிரப்பும் இடமான மாபிம பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விநியோகம் தடைபட்டதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்  அறிவித்திருந்தது.

அதேநேரம் ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பல் தாமதமானது. இதனால் கடந்த காலங்களில் எரிவாயு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இப்போது  குறித்தக் கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்பட்டுள்ளது  என  நிறுவனம்  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய வாகனம் முற்றுகை - பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் முற்றாக தடைப்பட்ட நிலையில் இன்று விநியோகம் இடம்பெறுவதனால் மக்கள் எரிவாயுவை வாங்குவதற்காக அலைமோதியுள்ளனர். அதன்படி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர்.அத்தோடு  மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.இந்நிலையில் நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இதையடுத்து எரிபொருள் நிரப்பும் இடமான மாபிம பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விநியோகம் தடைபட்டதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்  அறிவித்திருந்தது.அதேநேரம் ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பல் தாமதமானது. இதனால் கடந்த காலங்களில் எரிவாயு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது  குறித்தக் கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்பட்டுள்ளது  என  நிறுவனம்  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement