முதன்முறையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நெதன்யாகு, லெபனான் பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலடனேயே நடந்ததாக தெரிவித்தார்.
இதனை நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஒமர் டோஸ்ட்ரி உறுதி செய்தார்.
மேலும், இஸ்ரேலிய பிரதமர், ஞாயிற்றுக்கிழமை (10) நடந்த வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயத்தை முதன்முறையாக ஒப்புக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் லெபனான், சிரியாவின் சில பகுதிகளில் வெடிபொருட்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்கதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக குற்றம்சாட்டிய ஹிஸ்பொல்லா, தாக்குதலுக்கு பழிவாங்குவதாகவும் அப்போது கூறியிருந்தது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கியதைத் அடுத்து காஸாவில் போர் வெடித்ததில் இருந்து இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் லெபனான் எல்லையில் சண்டையிட்டு வருகின்றனர்.
அப்போதிருந்து, ஈரான் ஆதரவு குழுவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லெபனான் பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதல்களை ஒப்புக் கொண்ட - இஸ்ரேலிய பிரதமர் முதன்முறையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நெதன்யாகு, லெபனான் பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலடனேயே நடந்ததாக தெரிவித்தார். இதனை நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஒமர் டோஸ்ட்ரி உறுதி செய்தார்.மேலும், இஸ்ரேலிய பிரதமர், ஞாயிற்றுக்கிழமை (10) நடந்த வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயத்தை முதன்முறையாக ஒப்புக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் லெபனான், சிரியாவின் சில பகுதிகளில் வெடிபொருட்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.இந்த தாக்கதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக குற்றம்சாட்டிய ஹிஸ்பொல்லா, தாக்குதலுக்கு பழிவாங்குவதாகவும் அப்போது கூறியிருந்தது.கடந்த ஆண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கியதைத் அடுத்து காஸாவில் போர் வெடித்ததில் இருந்து இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் லெபனான் எல்லையில் சண்டையிட்டு வருகின்றனர்.அப்போதிருந்து, ஈரான் ஆதரவு குழுவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.