• Dec 11 2024

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் - நீதிமன்றில் அறிவிக்கவுள்ள பொலிஸார்

Chithra / Nov 11th 2024, 10:24 am
image

 

கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த பகுதி மக்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று பிற்பகலும் கிரிஷ் கட்டடத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த இரும்பு மூடியின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.

குறித்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் இன்று நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, காரொன்றின் மீது இரும்புப் பகுதி ஒன்று வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான பல சம்பவங்கள் பதிவான நிலையில் அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் - நீதிமன்றில் அறிவிக்கவுள்ள பொலிஸார்  கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அந்த பகுதி மக்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.நேற்று பிற்பகலும் கிரிஷ் கட்டடத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த இரும்பு மூடியின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.குறித்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் இன்று நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, காரொன்றின் மீது இரும்புப் பகுதி ஒன்று வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.இவ்வாறான பல சம்பவங்கள் பதிவான நிலையில் அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement