கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை முதல் குறித்த ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான முதலாவது ரயில், செவ்வாய்க்கிழமை மாலை 4:15 இற்கு புறப்படும் என திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேர அட்டவணையின்படி, குறித்த ரயில் இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை கடந்த 28ம் திகதி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் காங்கேசன்துறைக்கும், கொழும்பு - கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட ரயில் சேவையை கடந்த 2ம் திகதி முதல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீண்டும் ஆரம்பமாகும் கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை முதல் குறித்த ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான முதலாவது ரயில், செவ்வாய்க்கிழமை மாலை 4:15 இற்கு புறப்படும் என திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.அத்துடன் நேர அட்டவணையின்படி, குறித்த ரயில் இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை கடந்த 28ம் திகதி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.அத்துடன் காங்கேசன்துறைக்கும், கொழும்பு - கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட ரயில் சேவையை கடந்த 2ம் திகதி முதல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.