அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை மீண்டும் ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு உரிய நபர்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அரச வாகனங்களை மீண்டும் ஒப்படைத்தவர்கள் மற்றும் அதனை சட்டவிரோதமாக வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பெயர்கள் எம்மிடம் உள்ளன.
இவை அனைத்தும் பொதுமக்களின் சொத்துக்கள் ஆகும்.
எனவே அரச வாகனங்களைச் சட்டவிரோதமாக வைத்திருப்பவர்கள் அவற்றை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த செயற்திட்டம் ஆரம்பமாகி ஒரு வார காலமே ஆகின்றது. எனவே கால அவகாசம் முடிவடைந்ததும் அரச வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரச வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை மீண்டும் ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு உரிய நபர்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அரச வாகனங்களை மீண்டும் ஒப்படைத்தவர்கள் மற்றும் அதனை சட்டவிரோதமாக வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பெயர்கள் எம்மிடம் உள்ளன.இவை அனைத்தும் பொதுமக்களின் சொத்துக்கள் ஆகும். எனவே அரச வாகனங்களைச் சட்டவிரோதமாக வைத்திருப்பவர்கள் அவற்றை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இந்த செயற்திட்டம் ஆரம்பமாகி ஒரு வார காலமே ஆகின்றது. எனவே கால அவகாசம் முடிவடைந்ததும் அரச வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.