• Nov 28 2024

அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை; ஜனாதிபதி எச்சரிக்கை

Chithra / Oct 31st 2024, 9:39 am
image


அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதேவேளை எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நெறிமுறையற்ற செயற்பாடுகளை கைவிட்டு ஊடகவியலில் புதிய ஜனநாயக அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறும் ஜனாதிபதி  ஊடக நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சினைகளை உண்மையாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பொறுப்பான அறிக்கையிடலை நோக்கி, தம்மை தயார்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை; ஜனாதிபதி எச்சரிக்கை அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் நெறிமுறையற்ற செயற்பாடுகளை கைவிட்டு ஊடகவியலில் புதிய ஜனநாயக அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறும் ஜனாதிபதி  ஊடக நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.பிரச்சினைகளை உண்மையாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அத்துடன் பொறுப்பான அறிக்கையிடலை நோக்கி, தம்மை தயார்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement