ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிக நீண்ட நாள் தேவையாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகின்ற மருத்துவ பீடமொன்றினை அமைப்பதற்காக ஒவ்வொரு அரசாங்கத்திடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தாலும் இது வரை எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லையெனவும் இந்த அரசாங்கமாவது இது விடயம் குறித்து கவனமெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்றையதினம்(21) இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இவ் வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் மிக குறைந்தளவிலான ஒதுக்கீடுகளே கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதெனவும், அதிக தேவைகளை கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.
அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பிரதேசமானது விவசாயத்திற்கு பெயர் போன பிரதேசமாக காணப்படுவதனால், இப்பல்கலைக்கழகத்திற்கு விவசாய பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் அதிக ஒதுக்கீடுகளை செய்து தருமாறும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.
வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு; சபையில் அஷ்ரப் தாஹிர் MP விடுத்த கோரிக்கை. ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிக நீண்ட நாள் தேவையாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகின்ற மருத்துவ பீடமொன்றினை அமைப்பதற்காக ஒவ்வொரு அரசாங்கத்திடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தாலும் இது வரை எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லையெனவும் இந்த அரசாங்கமாவது இது விடயம் குறித்து கவனமெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.பாராளுமன்றில் நேற்றையதினம்(21) இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதியால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இவ் வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் மிக குறைந்தளவிலான ஒதுக்கீடுகளே கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதெனவும், அதிக தேவைகளை கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பிரதேசமானது விவசாயத்திற்கு பெயர் போன பிரதேசமாக காணப்படுவதனால், இப்பல்கலைக்கழகத்திற்கு விவசாய பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் அதிக ஒதுக்கீடுகளை செய்து தருமாறும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.