'பெண்களின் தலைமைத்துவத்தை அரசியலில் மேம்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று(04) காலை விழிப்புணர்வு நாடக நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மகளிர் அபிவிருத்தி சம்மேளன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மகாலக்சுமி குருசாந்தன் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
பெண்களது உரிமைகளுக்காக நீண்ட காலமாக மன்னார் மாவட்டத்திலும் சரி தேசிய ரீதியிலும் சரி, பெண்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றோம்.
அந்தவகையில், பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலை திட்டங்களை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் பெண்கள் வந்து அரசியயும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட பெண்கள் அரசியலுக்கு கூடுதலான பிரதிநிதித்துவம் வைக்க வேணும் என்னும் பிரச்சாரங்களை நாங்கள் செய்து வருகின்றோம்.
அந்த வகையிலே தற்போதும் பெண்களை அரசியலில் பெண்களின் தலைமை துவத்தை வகிக்க வேண்டும் என்ற பிரச்சாரங்களை செய்து வந்தோம்.
அந்தவகையில் பெண்களை அரசியலில் மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் வீதி நாடகத்தை நாங்கள் அரங்கேற்றிக்கொண்டு வருகிறோம்.
அந்தவகையில் இன்று காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலும் பிற்பகல் மூன்று மணிக்கு சாவகச்சேரி பேருந்து நிலையத்திலும் நாங்கள் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளோம்
மட்டக்களப்பில் இயங்கும் சபலை என்ற பெண்கள் அமைப்பினரே இந்த நாடக குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
நாளை முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு சந்தியில் 10 மணிக்கு முதலாவது நாடகத்தையும், இரண்டாவது நாடகத்தை மான்சோலை சந்நிதியிலும் நாங்கள் செய்ய இருக்கின்றோம்
அடுத்ததாக கிளிநொச்சியில் ஆறாம் திகதி பேருந்து நிலையத்திலும் பிற்பகல் பரந்தன் பேருந்து நிலையத்திலும் இந்த நாடகத்தை அரங்கேற்ற இருக்கின்றோம்.
அடுத்தது ஏழாம் திகதி மன்னாரில் மன்னார் நகர பகுதி பேருந்து நிலையத்தில் பிற்பகல் நானாட்டான் பேருந்து நிலையத்திலும் இந்த நாடகத்தை அரங்கேற்ற இருக்கின்றோம்.
இறுதியாக புதிய பேருந்து நிலையத்தில் காலையிலும் பிற்பகல் பழைய பேருந்து நிலையத்திலும் இந்த நாடகத்தை அரங்கேற்ற இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.