• May 08 2024

மீண்டும் எழுவோம்...! புதிய வியூகங்களுடன் தேர்தல் களத்தில் இறங்கிய ராஜபக்ச தரப்பு...!samugammedia

Sharmi / Jan 16th 2024, 1:41 pm
image

Advertisement

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு 2,500 தலைமைத்துவ பயிற்சி கூட்டங்களை "சத் ஜனரல" என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது செயலமர்வு கடந்த 14ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் கட்சியின் 200 சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு, கிராமத்திற்கு சென்று கட்சி விவகாரங்களை தெரிவிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவினால் சரியான தொடர்பாடல் தொடர்பிலான நீண்ட விரிவுரை இடம்பெற்றது.

கிராமிய தலைவர்களை கட்டமைக்கும் கட்சியின் இளைஞர் அமைப்பிற்கு அதிகாரம் அளிப்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மீண்டும் எழுவோம். புதிய வியூகங்களுடன் தேர்தல் களத்தில் இறங்கிய ராஜபக்ச தரப்பு.samugammedia ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு 2,500 தலைமைத்துவ பயிற்சி கூட்டங்களை "சத் ஜனரல" என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் முதலாவது செயலமர்வு கடந்த 14ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.இதில் கட்சியின் 200 சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அங்கு, கிராமத்திற்கு சென்று கட்சி விவகாரங்களை தெரிவிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவினால் சரியான தொடர்பாடல் தொடர்பிலான நீண்ட விரிவுரை இடம்பெற்றது.கிராமிய தலைவர்களை கட்டமைக்கும் கட்சியின் இளைஞர் அமைப்பிற்கு அதிகாரம் அளிப்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement