• Nov 30 2024

'சமூகத்தை வலுப்படுத்துவோம் எய்ட்ஸ் நோயை தடுப்போம்' ...!மன்னாரில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுப்பு...!samugammedia

Sharmi / Dec 6th 2023, 3:55 pm
image

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி 'சமூகத்தை வலுப்படுத்துவோம் 'எய்ட்ஸ்' ஐ தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்றைய தினம்(6) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனையின் பிராந்திய பாலியல் நோய்கள், எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஊர்வலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மன்னார் பஸார் வீதியூடாக பொது விளையாட்டு மைதான வீதியை சென்றடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை சென்றடைந்தது.

குறித்த ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு வைத்திய அதிகாரி,மற்றும் வைத்தியர்கள் பணியாளர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்கள், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




'சமூகத்தை வலுப்படுத்துவோம் எய்ட்ஸ் நோயை தடுப்போம்' .மன்னாரில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுப்பு.samugammedia சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி 'சமூகத்தை வலுப்படுத்துவோம் 'எய்ட்ஸ்' ஐ தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்றைய தினம்(6) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனையின் பிராந்திய பாலியல் நோய்கள், எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த ஊர்வலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மன்னார் பஸார் வீதியூடாக பொது விளையாட்டு மைதான வீதியை சென்றடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை சென்றடைந்தது.குறித்த ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு வைத்திய அதிகாரி,மற்றும் வைத்தியர்கள் பணியாளர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்கள், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement