• Nov 24 2024

பாராளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள்- தமிழ் தேசிய கட்சிகளுக்கு அரியநேத்திரன் அழைப்பு..!

Sharmi / Sep 24th 2024, 7:57 am
image

வடக்கு கிழக்கிலும் தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும் பல பிரச்சாரங்களையும் செய்த போது அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம்(23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் பதவி ஏற்கின்றார்.

அவருக்கு வேட்பாளர் என்ற சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளும் தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து புதுவேட்பாளராக என்னை நிறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவினைப் பற்றி இரண்டு லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். 

அதற்கு இந்த மக்களுக்கு முதற்கண் நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தல் 1978 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பின் பிரகாரம் கொண்டு வரப்பட்டு 1982 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அந்த 9 ஜனாதிபதி தேர்தல்களில் பல தமிழர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள். 

குமார் பொன்னம்பலம் 1982 ஆம் ஆண்டு போட்டியிட்டிருக்கின்றார். அதன் பிற்பாடு சிவாஜிலிங்கம் அவர்கள் இரண்டு முறை போட்டியிட்டு இருக்கிறார். அவர் தனி வேட்பாளராக போட்டியிட்டாலும் இம்முறை தேர்தலில் ஒரு பொதுவேட்பாளராக பலரின் முயற்சியின் காரணமாக தமிழ் தேசிய கட்சிகளின் அரசியலில் மையப்படுத்தி இந்த தேர்தல் இடம்பெற்றது.

அதனடிப்படையில் என்றும் இல்லாதவரை இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் என்கின்ற வகையில் அதிகூடிய வாக்குகளை பெற்று தமிழ் தேசியம் தொடர்ச்சியாக இறுதிப்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் இது செய்தினை இதன் மூலமாக வெளிகாட்டப்படுகின்றது.

அதில் இரண்டாவதாக நாங்கள் பார்க்க வேண்டி இருக்கின்றது இணைந்த வடகிழக்கில் உறுதியாக இருக்கின்றார்கள், இணைந்த வடகிழக்கு தான் தமிழர்களின் அரசியல் தீர்வு என்பதனை இந்த தேர்தல் வெளிக்காட்டி இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற என்னை இந்த தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்திய போது, கிழக்கு மாகாணத்தை விட வட மாகாணத்தில் மக்கள் அதிகூடிய வாக்குகளை அளித்திருக்கின்னார்கள். அதில் விசேடமாக அவர்களுக்கு நன்றி கூறக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

உண்மையில் வடமாகாணத்தை பொறுத்த அளவில் வடமாகாண மக்கள் உறுதியுடன் வாக்களித்ததன் நிமித்தமாக இணைந்த வடகிழக்கில் வடக்கும் கிழக்கும்தான் நமது தாயகம் என்பது இந்த தேர்தல் மூலமாக வெளிக்காட்டப்பட்டு இருக்கின்றது என்கின்ற விடயத்தினை இந்த தேர்தலில் ஊடாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

மூன்றாவதாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது இந்த வாக்களித்த விடயத்தில் கூடுதலாக 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றது. அதில் என்ன விடயம் என்றால் குறிப்பாக நாங்கள் கடந்த தேர்தல்களில் எல்லாம் ஒரு நபருக்கு ஒரு புள்ளடி போடுகின்ற விடயத்தையே கூறி இருந்தோம்.

ஆனால் இந்த முறை பலர் அதனை குழப்பி இலக்கங்களை போடுமாறு கூறுகின்ற போது பல வாக்குகள் சிதறிக்கப்பட்டு இருக்கின்றது.

அதில் குறிப்பாக தமிழ் பொது வேட்பாளருக்குரிய வாக்குகள் தான் கூடுதலாக சிதறிக்கப்பட்டதாக வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து மக்கள் கூறுகின்ற கருத்தினை பார்க்கின்றபோது பொது வேட்பாளர் சின்னமாக இருக்கக்கூடிய சங்கு சின்னத்திற்கும் ஒரு புள்ளடி இட்டு விட்டு ஏனையவர்களுக்கு இலக்கங்களை போட்டதன் காரணமாக கூடுதலான வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றது.

இலங்கையில் இருக்கக்கூடிய 22 மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகள் நிராகரிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது இரண்டு ஆவது நிராகரிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் இருக்கின்றது ஏறக்குறைய 25000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விடயங்களை பார்க்கின்ற போது உண்மையில் அதனை பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆனால் இந்த பொது கட்டமைப்பின் ஊடாக தமிழ் தேசிய வேட்பாளராக அல்லது தமிழ் பொது கட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது பல எதிர்ப்புக்கள் பல முனைகளில் இருந்து தோற்றம் பெற்றிருந்தது. 

குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அணியினர் பொது வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். இன்னும் ஒரு பிரிவினர் அதனை எதிர்த்து வேலை செய்தார்கள். 

அவ்வாறு வடக்கு கிழக்கிலும் தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும் பல பிரச்சாரங்களையும் செய்த போது அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பது என்பது பெரியோருடைய காண்பிக்கப்படுகின்றது.

பொதுவாக நாங்கள் பார்க்கின்ற போது இந்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை நிலை நாட்டுவதற்காக ஒன்றிணைக்கப்பட்டு இந்த பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்றார். 

இந்த நாட்டை புதிய ஜனாதிபதி பாரமெடுத்திருக்கின்றார். அனுரகுமார திசாநாயக்க அவர்கள். 

மிக விரைவில் ஒரு பாராளுமன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்றது.

ஆகவே இன்னும் ஒரு பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் நாங்கள் தமிழ்த் தேசிய அரசியலை மையப்படுத்துகின்ற சகல கட்சிகளும் ஒரு அணியில் ஒரு குடையின் கீழ் நின்று நாங்கள் இந்த தேர்தலில் சந்திப்போமாக இருந்தால் மாத்திரம் தான் எங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.

கிழக்கு மாகாணத்தை பொருத்தமட்டில் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் ஒரு பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தோம். இப்பொழுது திருகோணமலை மாவட்டத்தை பார்க்கின்ற போது அவ்வாறான நிலையை தான் இருந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே இதை மையப்படுத்தி சகல தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குடையின் கீழ் ஒரு சின்னத்தின் கீழ் நாங்கள் போட்டியிடக் கூடிய ஒரு தேவை எங்களுக்கு இருக்கின்றது என்பதனை அனைவரையும் அனைவருக்கும் அரவணைத்துச்செல்ல வேண்டும் என்கின்ற வகையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் இருந்து கருத்து முரண்பாடுகள் காரணமாக சில பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் கூட இனிவரும் காலங்களில் அந்த முரண்பாடுகளை தவிர்த்து பாராளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு அணியில் ஒரு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற பகிரங்க அழைப்பினை விடுக்கின்றேன்.

குறிப்பாக இந்த தமிழ் தேசிய அரசியலில் ஜனாதிபதி தேர்தலில் பலர் எங்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள். அதில் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற அனைவரும் உதவிகள் கிடைத்திருக்கிறது அவர்களின் பிரசாரம் என்பது எமக்கு தெளிவையும் ஒரு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இதைவிட வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உதவி செய்திருந்தார்கள் பொது கட்டமைப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து வேலை செய்திருந்தார்கள் அதை விடவும் முன்னால் போராளிகள் பலரும் பல விடயங்களில் எங்களுக்கு உதவி செய்திருந்தார்கள் அதில் தமிழ் தேசிய கட்டமைப்பில் இருக்கின்ற ஜனநாயக போராளிகள் கட்சிக்கு அப்பால் இருக்கின்ற போராளிகளும் எங்களுக்கு உதவிகளை செய்திருந்தார்கள்.

குறிப்பாக ஊடகவியலாளர்களையும் பாராட்ட வேண்டும் குறிப்பாக தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய காலம் இருந்து சகல ஊடகங்களும் எங்களுக்கு அர்ப்பணிப்புடன் பல உதவிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும்  முன்னெடுத்திருந்தார்கள்.

அதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம் அத்தோடு எந்த பொது கட்டமைப்பில் இருக்கின்ற 83 பொது அமைப்புகளை தவிர்ந்த இனிய பல அமைப்புகள் பல உதவிகளை எங்களுக்கு செய்திருந்தார்கள் அது அவர்களை நாங்கள் மறக்க முடியாது.

பொது வேட்பாளரை நிறுத்தியது தமிழ் தேசிய பரப்பில் தோற்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று சொன்னால் கட்டாயமாக பார்க்க வேண்டிய விடயம் இருக்கின்றது என்னவென்றால் பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என்று கூறியவர்களை நாங்கள் வென்றிருக்கின்றோம் என்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

சுய லாபங்களுக்காக பலருக்கு எதிராக வேலை செய்தாலும் கூட மக்கள் திரட்சையாக சென்று வாக்களித்திருக்கின்றார்கள் இதை மையப்படுத்தி எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக செல்லாமல் விடுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் பாரிய சவால்களை சந்திக்க இருக்கும் என்பதனை பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இரண்டாவதாக புது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவிடம் நாங்கள் சில செய்திகளை கூற விரும்புகின்றோம் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் விடயங்களை பார்க்கின்ற போது கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இனவாத நடவடிக்கைகளை பல முரண்பட்ட கருத்துக்களை கூறியிருந்தாலும் கூட தற்போது ஒன்பதாவது ஜனாதிபதியாக அவர் பதவியேற்றி இருக்கின்றார்.

 உண்மையில் இணைந்த வட கிழக்கில் ஒரு அரசியல் தீர்வை தருவதற்கான அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மேற்கொள்வார் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

அவருக்கும் ஒரு செய்தியினை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். ஒற்றுமையாக கடந்த காலங்களில் 8 ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்தாலும் கூட ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் ஏன் இவ்வாறு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு விடயத்தை நாங்கள் எடுத்தோம் என்றால் கடந்த காலங்களில் ஜனாதிபதிகளால் ஏமாற்றப்பட்ட காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

இப்போது நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுடன் வடகிழக்கு மக்களை இன்னமும் சிதறடிக்காமல் அவர்களுக்கான ஒரு சுயநிர்ண உரிமையை வழங்காமல் அவர்களுக்கான ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அவரின் காலத்தில் ஆவது வழங்கி தமிழ் மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கி ஆட்சி செய்வார்களா இருந்தால் உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு ஆட்சியாக இருக்கும்.

இந்த விடயம் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு கிடைத்தது என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்கின்றது ஆகவே தமிழ் தேசியத்தை தொடர்ச்சியாக தக்க வைக்க வேண்டுமாக இருந்தால், இன்றிலிருந்து அடுத்த கட்டத்திற்கு அனைவரும் ஒரு கொடியின் கீழ் செல்வதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து வரவேண்டும் அதில் எதிர்ப்புகள் இருந்தாலும் தனிப்பட்ட குரோதங்கள் இருந்தாலும் தனிப்பட்ட அரசியல் விடயங்களை விட்டு நாங்கள் இந்த விடயத்தை மையப்படுத்தி எல்லோருமாக இணைந்து செயல்படுமாக இருந்தால் நிச்சயமாக ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள்- தமிழ் தேசிய கட்சிகளுக்கு அரியநேத்திரன் அழைப்பு. வடக்கு கிழக்கிலும் தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும் பல பிரச்சாரங்களையும் செய்த போது அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம்(23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் பதவி ஏற்கின்றார்.அவருக்கு வேட்பாளர் என்ற சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளும் தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து புதுவேட்பாளராக என்னை நிறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவினைப் பற்றி இரண்டு லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு இந்த மக்களுக்கு முதற்கண் நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜனாதிபதி தேர்தல் 1978 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பின் பிரகாரம் கொண்டு வரப்பட்டு 1982 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அந்த 9 ஜனாதிபதி தேர்தல்களில் பல தமிழர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள். குமார் பொன்னம்பலம் 1982 ஆம் ஆண்டு போட்டியிட்டிருக்கின்றார். அதன் பிற்பாடு சிவாஜிலிங்கம் அவர்கள் இரண்டு முறை போட்டியிட்டு இருக்கிறார். அவர் தனி வேட்பாளராக போட்டியிட்டாலும் இம்முறை தேர்தலில் ஒரு பொதுவேட்பாளராக பலரின் முயற்சியின் காரணமாக தமிழ் தேசிய கட்சிகளின் அரசியலில் மையப்படுத்தி இந்த தேர்தல் இடம்பெற்றது.அதனடிப்படையில் என்றும் இல்லாதவரை இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் என்கின்ற வகையில் அதிகூடிய வாக்குகளை பெற்று தமிழ் தேசியம் தொடர்ச்சியாக இறுதிப்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் இது செய்தினை இதன் மூலமாக வெளிகாட்டப்படுகின்றது.அதில் இரண்டாவதாக நாங்கள் பார்க்க வேண்டி இருக்கின்றது இணைந்த வடகிழக்கில் உறுதியாக இருக்கின்றார்கள், இணைந்த வடகிழக்கு தான் தமிழர்களின் அரசியல் தீர்வு என்பதனை இந்த தேர்தல் வெளிக்காட்டி இருக்கின்றது.கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற என்னை இந்த தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்திய போது, கிழக்கு மாகாணத்தை விட வட மாகாணத்தில் மக்கள் அதிகூடிய வாக்குகளை அளித்திருக்கின்னார்கள். அதில் விசேடமாக அவர்களுக்கு நன்றி கூறக்கூடியவர்களாக இருக்கின்றோம்.உண்மையில் வடமாகாணத்தை பொறுத்த அளவில் வடமாகாண மக்கள் உறுதியுடன் வாக்களித்ததன் நிமித்தமாக இணைந்த வடகிழக்கில் வடக்கும் கிழக்கும்தான் நமது தாயகம் என்பது இந்த தேர்தல் மூலமாக வெளிக்காட்டப்பட்டு இருக்கின்றது என்கின்ற விடயத்தினை இந்த தேர்தலில் ஊடாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.மூன்றாவதாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது இந்த வாக்களித்த விடயத்தில் கூடுதலாக 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றது. அதில் என்ன விடயம் என்றால் குறிப்பாக நாங்கள் கடந்த தேர்தல்களில் எல்லாம் ஒரு நபருக்கு ஒரு புள்ளடி போடுகின்ற விடயத்தையே கூறி இருந்தோம்.ஆனால் இந்த முறை பலர் அதனை குழப்பி இலக்கங்களை போடுமாறு கூறுகின்ற போது பல வாக்குகள் சிதறிக்கப்பட்டு இருக்கின்றது.அதில் குறிப்பாக தமிழ் பொது வேட்பாளருக்குரிய வாக்குகள் தான் கூடுதலாக சிதறிக்கப்பட்டதாக வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து மக்கள் கூறுகின்ற கருத்தினை பார்க்கின்றபோது பொது வேட்பாளர் சின்னமாக இருக்கக்கூடிய சங்கு சின்னத்திற்கும் ஒரு புள்ளடி இட்டு விட்டு ஏனையவர்களுக்கு இலக்கங்களை போட்டதன் காரணமாக கூடுதலான வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றது.இலங்கையில் இருக்கக்கூடிய 22 மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகள் நிராகரிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது இரண்டு ஆவது நிராகரிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் இருக்கின்றது ஏறக்குறைய 25000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.இந்த விடயங்களை பார்க்கின்ற போது உண்மையில் அதனை பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆனால் இந்த பொது கட்டமைப்பின் ஊடாக தமிழ் தேசிய வேட்பாளராக அல்லது தமிழ் பொது கட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது பல எதிர்ப்புக்கள் பல முனைகளில் இருந்து தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அணியினர் பொது வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். இன்னும் ஒரு பிரிவினர் அதனை எதிர்த்து வேலை செய்தார்கள். அவ்வாறு வடக்கு கிழக்கிலும் தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும் பல பிரச்சாரங்களையும் செய்த போது அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பது என்பது பெரியோருடைய காண்பிக்கப்படுகின்றது.பொதுவாக நாங்கள் பார்க்கின்ற போது இந்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை நிலை நாட்டுவதற்காக ஒன்றிணைக்கப்பட்டு இந்த பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த நாட்டை புதிய ஜனாதிபதி பாரமெடுத்திருக்கின்றார். அனுரகுமார திசாநாயக்க அவர்கள். மிக விரைவில் ஒரு பாராளுமன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்றது.ஆகவே இன்னும் ஒரு பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் நாங்கள் தமிழ்த் தேசிய அரசியலை மையப்படுத்துகின்ற சகல கட்சிகளும் ஒரு அணியில் ஒரு குடையின் கீழ் நின்று நாங்கள் இந்த தேர்தலில் சந்திப்போமாக இருந்தால் மாத்திரம் தான் எங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.கிழக்கு மாகாணத்தை பொருத்தமட்டில் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் ஒரு பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தோம். இப்பொழுது திருகோணமலை மாவட்டத்தை பார்க்கின்ற போது அவ்வாறான நிலையை தான் இருந்து கொண்டிருக்கின்றது.ஆகவே இதை மையப்படுத்தி சகல தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குடையின் கீழ் ஒரு சின்னத்தின் கீழ் நாங்கள் போட்டியிடக் கூடிய ஒரு தேவை எங்களுக்கு இருக்கின்றது என்பதனை அனைவரையும் அனைவருக்கும் அரவணைத்துச்செல்ல வேண்டும் என்கின்ற வகையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் இருந்து கருத்து முரண்பாடுகள் காரணமாக சில பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் கூட இனிவரும் காலங்களில் அந்த முரண்பாடுகளை தவிர்த்து பாராளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு அணியில் ஒரு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற பகிரங்க அழைப்பினை விடுக்கின்றேன்.குறிப்பாக இந்த தமிழ் தேசிய அரசியலில் ஜனாதிபதி தேர்தலில் பலர் எங்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள். அதில் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற அனைவரும் உதவிகள் கிடைத்திருக்கிறது அவர்களின் பிரசாரம் என்பது எமக்கு தெளிவையும் ஒரு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.இதைவிட வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உதவி செய்திருந்தார்கள் பொது கட்டமைப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து வேலை செய்திருந்தார்கள் அதை விடவும் முன்னால் போராளிகள் பலரும் பல விடயங்களில் எங்களுக்கு உதவி செய்திருந்தார்கள் அதில் தமிழ் தேசிய கட்டமைப்பில் இருக்கின்ற ஜனநாயக போராளிகள் கட்சிக்கு அப்பால் இருக்கின்ற போராளிகளும் எங்களுக்கு உதவிகளை செய்திருந்தார்கள்.குறிப்பாக ஊடகவியலாளர்களையும் பாராட்ட வேண்டும் குறிப்பாக தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய காலம் இருந்து சகல ஊடகங்களும் எங்களுக்கு அர்ப்பணிப்புடன் பல உதவிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும்  முன்னெடுத்திருந்தார்கள்.அதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம் அத்தோடு எந்த பொது கட்டமைப்பில் இருக்கின்ற 83 பொது அமைப்புகளை தவிர்ந்த இனிய பல அமைப்புகள் பல உதவிகளை எங்களுக்கு செய்திருந்தார்கள் அது அவர்களை நாங்கள் மறக்க முடியாது.பொது வேட்பாளரை நிறுத்தியது தமிழ் தேசிய பரப்பில் தோற்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று சொன்னால் கட்டாயமாக பார்க்க வேண்டிய விடயம் இருக்கின்றது என்னவென்றால் பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என்று கூறியவர்களை நாங்கள் வென்றிருக்கின்றோம் என்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.சுய லாபங்களுக்காக பலருக்கு எதிராக வேலை செய்தாலும் கூட மக்கள் திரட்சையாக சென்று வாக்களித்திருக்கின்றார்கள் இதை மையப்படுத்தி எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக செல்லாமல் விடுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் பாரிய சவால்களை சந்திக்க இருக்கும் என்பதனை பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.இரண்டாவதாக புது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவிடம் நாங்கள் சில செய்திகளை கூற விரும்புகின்றோம் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் விடயங்களை பார்க்கின்ற போது கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இனவாத நடவடிக்கைகளை பல முரண்பட்ட கருத்துக்களை கூறியிருந்தாலும் கூட தற்போது ஒன்பதாவது ஜனாதிபதியாக அவர் பதவியேற்றி இருக்கின்றார். உண்மையில் இணைந்த வட கிழக்கில் ஒரு அரசியல் தீர்வை தருவதற்கான அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மேற்கொள்வார் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.அவருக்கும் ஒரு செய்தியினை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். ஒற்றுமையாக கடந்த காலங்களில் 8 ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்தாலும் கூட ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் ஏன் இவ்வாறு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு விடயத்தை நாங்கள் எடுத்தோம் என்றால் கடந்த காலங்களில் ஜனாதிபதிகளால் ஏமாற்றப்பட்ட காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்பட்டது.இப்போது நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுடன் வடகிழக்கு மக்களை இன்னமும் சிதறடிக்காமல் அவர்களுக்கான ஒரு சுயநிர்ண உரிமையை வழங்காமல் அவர்களுக்கான ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அவரின் காலத்தில் ஆவது வழங்கி தமிழ் மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கி ஆட்சி செய்வார்களா இருந்தால் உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு ஆட்சியாக இருக்கும்.இந்த விடயம் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு கிடைத்தது என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்கின்றது ஆகவே தமிழ் தேசியத்தை தொடர்ச்சியாக தக்க வைக்க வேண்டுமாக இருந்தால், இன்றிலிருந்து அடுத்த கட்டத்திற்கு அனைவரும் ஒரு கொடியின் கீழ் செல்வதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து வரவேண்டும் அதில் எதிர்ப்புகள் இருந்தாலும் தனிப்பட்ட குரோதங்கள் இருந்தாலும் தனிப்பட்ட அரசியல் விடயங்களை விட்டு நாங்கள் இந்த விடயத்தை மையப்படுத்தி எல்லோருமாக இணைந்து செயல்படுமாக இருந்தால் நிச்சயமாக ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement