• Feb 06 2025

சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பாக லசந்தவின் மகளிடமிருந்து பிரதமருக்கு கடிதம்

Tharmini / Feb 6th 2025, 2:49 pm
image

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது சட்டமா அதிபரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான கடமைத் தவறுதல் குறித்ததாகும்.

லசந்த கொலை வழக்கு தொடர்பான சமீபத்திய விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட மூன்று பேரை கல்கிசை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தமை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க சம்பந்தப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நேற்று, ஊடகவியலாளர்கள் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினர், அப்போது அவர் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட பரிந்துரையை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.

அதன்படி, எதிர்காலத்தில் தொடர்புடைய முடிவு குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி உட்பட மூன்று பேரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தனது சட்டக் கருத்தை வழங்கியிருந்தார்.

ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இது கூறப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பாக லசந்தவின் மகளிடமிருந்து பிரதமருக்கு கடிதம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது சட்டமா அதிபரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான கடமைத் தவறுதல் குறித்ததாகும்.லசந்த கொலை வழக்கு தொடர்பான சமீபத்திய விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட மூன்று பேரை கல்கிசை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தமை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க சம்பந்தப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், நேற்று, ஊடகவியலாளர்கள் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினர், அப்போது அவர் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட பரிந்துரையை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.அதன்படி, எதிர்காலத்தில் தொடர்புடைய முடிவு குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி உட்பட மூன்று பேரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தனது சட்டக் கருத்தை வழங்கியிருந்தார்.ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இது கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement