முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை செய்துகொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ,
கட்டுகஸ்தோட்டை, மஹய்யாவ பகுதியில் உள்ள ரத்வத்தவின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் 50 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காணப்பட்டார்.
பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
குறித்த அலுவலகத்தில் அவர் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் கடமையாற்றியதுடன், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் வெரல்லகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லொஹான் ரத்வத்தவின் பிரத்தியோக செயலாளர் உயிரிழப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை செய்துகொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ,கட்டுகஸ்தோட்டை, மஹய்யாவ பகுதியில் உள்ள ரத்வத்தவின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் 50 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காணப்பட்டார்.பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.குறித்த அலுவலகத்தில் அவர் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் கடமையாற்றியதுடன், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார்.உயிரிழந்தவர் வெரல்லகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.