• Oct 18 2024

நெடுந்தீவு கூட்டுப்படுகொலை...! ஆழமான விசாரணை நடாத்தப்பட்டு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்- கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து...!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 3:21 pm
image

Advertisement

நெடுந்தீவு கூட்டுப்படுகொலை தொடர்பில் ஆழமான விசாரணை நடாத்தப்பட்டு  உரிய நீதி  வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெடுந்தீவில் நேற்று ஐந்து பேர்  வெட்டிக் கொலை செய்யப்பட்டும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவகப் பகுதிகளில் இலங்கை ஆயுதப் படைகளின் முகாமுக்குள் மக்கள் வாழ்வதைப் போன்றும் நெடுந்தீவை எடுத்துக்கொண்டால் கடற்படை முகாமுக்குள் தமிழர்கள் வாழ்வதைப் போன்ற நிலையுள்ளது.

குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் இலங்கை கடற்படையின் பாரிய முகாமுள்ளது. தற்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கின்றது.

குறித்த இடத்தில் நாயொன்றும்  கொலை செய்ப்பட்டிருக்கின்றது. அதாவது நாயின் அசாதாரண நடவடிக்கையால் வெளித்தரப்புக்கள் எவரும் வந்துவிடக்கூடாது என்பதால் தான் கொல்லப்பட்டதா எனற சந்தேகம் நிலவுகின்றது.

எனவே கொலை நடக்கும் சந்தர்ப்பத்தில் இவ் விடயம் கடற்படையினருக்கு தெரியாமலிருந்ததா அல்லது தெரிந்தும்  தெரியாதது போல்  இருந்தார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக ஆழமான விசாரணை நடாத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி  வழங்கப்பட வேண்டும்.

நெடுந்தீவை சிங்கள மயமாக்கும் திட்டம் சிங்கள அரசிற்குள்ளது. வெடியரசன் கோட்டை வரலாற்றை மாற்றும் முயற்சி அண்மையில் இடம்பெற்ற போது மக்களின் எதிர்ப்பு இடம்பெற்றது. இவற்றை தடுக்கவே இ்வ்வாறான கொலைகள் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

கடந்த காலங்களில் பல விடயங்களுக்கான நீதி மூடி மறைக்குப்படுகின்ற தருணத்தில் இவ் விடயத்திற்கு எவ்வாறு நீதி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது. எனினும் நீதிக்கான பயணத்தில் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.

இவற்றை விட சில தினங்களுக்கு முன் ஐரோப்பியாவில் நாடு கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சித்திரைவதைக்குட்படுத்தப்பட்ட தமிழ் இளைஞன் தொடர்பான வழக்கு தொடர்பில் குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வெளியாகியிருந்தது.

அந்த வழக்கில் இலங்கை அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற விடயமே கூறப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

ஆகவே  இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தரப்புகள் இவ்வாறான விடயங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்றார்

நெடுந்தீவு கூட்டுப்படுகொலை. ஆழமான விசாரணை நடாத்தப்பட்டு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்- கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து.samugammedia நெடுந்தீவு கூட்டுப்படுகொலை தொடர்பில் ஆழமான விசாரணை நடாத்தப்பட்டு  உரிய நீதி  வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நெடுந்தீவில் நேற்று ஐந்து பேர்  வெட்டிக் கொலை செய்யப்பட்டும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீவகப் பகுதிகளில் இலங்கை ஆயுதப் படைகளின் முகாமுக்குள் மக்கள் வாழ்வதைப் போன்றும் நெடுந்தீவை எடுத்துக்கொண்டால் கடற்படை முகாமுக்குள் தமிழர்கள் வாழ்வதைப் போன்ற நிலையுள்ளது.குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் இலங்கை கடற்படையின் பாரிய முகாமுள்ளது. தற்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கின்றது. குறித்த இடத்தில் நாயொன்றும்  கொலை செய்ப்பட்டிருக்கின்றது. அதாவது நாயின் அசாதாரண நடவடிக்கையால் வெளித்தரப்புக்கள் எவரும் வந்துவிடக்கூடாது என்பதால் தான் கொல்லப்பட்டதா எனற சந்தேகம் நிலவுகின்றது.எனவே கொலை நடக்கும் சந்தர்ப்பத்தில் இவ் விடயம் கடற்படையினருக்கு தெரியாமலிருந்ததா அல்லது தெரிந்தும்  தெரியாதது போல்  இருந்தார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.இந்த விடயம் தொடர்பாக ஆழமான விசாரணை நடாத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி  வழங்கப்பட வேண்டும்.நெடுந்தீவை சிங்கள மயமாக்கும் திட்டம் சிங்கள அரசிற்குள்ளது. வெடியரசன் கோட்டை வரலாற்றை மாற்றும் முயற்சி அண்மையில் இடம்பெற்ற போது மக்களின் எதிர்ப்பு இடம்பெற்றது. இவற்றை தடுக்கவே இ்வ்வாறான கொலைகள் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.கடந்த காலங்களில் பல விடயங்களுக்கான நீதி மூடி மறைக்குப்படுகின்ற தருணத்தில் இவ் விடயத்திற்கு எவ்வாறு நீதி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது. எனினும் நீதிக்கான பயணத்தில் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.இவற்றை விட சில தினங்களுக்கு முன் ஐரோப்பியாவில் நாடு கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சித்திரைவதைக்குட்படுத்தப்பட்ட தமிழ் இளைஞன் தொடர்பான வழக்கு தொடர்பில் குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வெளியாகியிருந்தது.அந்த வழக்கில் இலங்கை அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற விடயமே கூறப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்.ஆகவே  இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தரப்புகள் இவ்வாறான விடயங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்றார்

Advertisement

Advertisement

Advertisement