• Nov 28 2024

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு - அநுரவுக்கு IMF அனுப்பியுள்ள கடிதம்

IMF
Chithra / Sep 25th 2024, 3:06 pm
image

 

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் இலங்கையின் எதிர்கால ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் எனசர்வதேச நாணய நிதியம் கருத்து வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், 

IMF இலங்கையுடன் பல வருடங்களாக கொண்டுள்ள சிறந்த ஈடுபாட்டை பெரிதும் மதிக்கின்றது என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் ஒரு உறுதியான பங்காளியாக இருப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு, சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றான இலங்கையை மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளை கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் வெளிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை ஆழப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு - அநுரவுக்கு IMF அனுப்பியுள்ள கடிதம்   ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் இலங்கையின் எதிர்கால ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் எனசர்வதேச நாணய நிதியம் கருத்து வெளியிட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், IMF இலங்கையுடன் பல வருடங்களாக கொண்டுள்ள சிறந்த ஈடுபாட்டை பெரிதும் மதிக்கின்றது என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியம் ஒரு உறுதியான பங்காளியாக இருப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு, சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றான இலங்கையை மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளை கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் வெளிக்காட்டியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை ஆழப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement