• Apr 11 2026

4000 லீற்றர் மண்ணெண்ணெய் ஏற்றிச் சென்ற லொறி - மடக்கிப்பிடித்த பிரதேசவாசிகள்!

shanu / Mar 13th 2026, 2:03 pm
image

கிதுல்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சுமார் 4,000 லீற்றர்  மண்ணெண்ணெயைப் பெற்று ஏற்றிச் செல்ல முயன்ற நபரை பிரதேசவாசிகள் மடக்கிப்பிடித்துள்ளனர். 



கிதுல்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து  எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரமும் இன்றி 4 தாங்கிகளில் ஏற்றிக்கொண்டு கேகாலை நோக்கிச் செல்ல முற்பட்ட  போதே லொறியை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.


கடந்த (05) ஆம் திகதி அதிகாலை வேளையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியில் மண்ணெண்ணெய் நிரப்பப்படுவதைக் கண்ட பிரதேசவாசிகள், உடனடியாகச் செயல்பட்டு லொறியை மடக்கிப் பிடித்ததுடன் கிதுல்கலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் லொறியுடன், அதன் சாரதி மற்றும் உதவியாளரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


4000 லீற்றர் மண்ணெண்ணெய் ஏற்றிச் சென்ற லொறி - மடக்கிப்பிடித்த பிரதேசவாசிகள் கிதுல்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சுமார் 4,000 லீற்றர்  மண்ணெண்ணெயைப் பெற்று ஏற்றிச் செல்ல முயன்ற நபரை பிரதேசவாசிகள் மடக்கிப்பிடித்துள்ளனர். கிதுல்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து  எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரமும் இன்றி 4 தாங்கிகளில் ஏற்றிக்கொண்டு கேகாலை நோக்கிச் செல்ல முற்பட்ட  போதே லொறியை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.கடந்த (05) ஆம் திகதி அதிகாலை வேளையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியில் மண்ணெண்ணெய் நிரப்பப்படுவதைக் கண்ட பிரதேசவாசிகள், உடனடியாகச் செயல்பட்டு லொறியை மடக்கிப் பிடித்ததுடன் கிதுல்கலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் லொறியுடன், அதன் சாரதி மற்றும் உதவியாளரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement