• Dec 08 2024

வேகத்தை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதிய லொறி; தாய் பலி; மகள் காயம்

Chithra / Sep 6th 2024, 3:46 pm
image

  

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

பாதெனியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த தாயும் 10 வயது மகளும் படுகாயமடைந்துள்ள நிலையில்,அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேகத்தை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதிய லொறி; தாய் பலி; மகள் காயம்   அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவரே உயிரிழந்துள்ளார்.பாதெனியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த தாயும் 10 வயது மகளும் படுகாயமடைந்துள்ள நிலையில்,அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரது சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement