• Dec 06 2024

துபாயில் மலர்ந்த காதல்..! இலங்கை திரும்பிய காதலி- காதலன் கைது..!

Sharmi / Aug 27th 2024, 4:05 pm
image

இலங்கையை சேர்ந்த தனது காதலியை பார்வையிட வந்த இந்திய பிரஜையான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்வானே – வல்கம பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லீம் பெண்ணொருவர் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு  இந்திய பிரஜை ஒருவருக்கும்  இலங்கையை சேர்ந்த முஸ்லீம் பெண்ணிற்கும் காதல்  மலர்ந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் குறித்த பெண்  கடந்த ஜூன் 20ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.

குறித்த பெண்ணின் காதலனான இந்திய பிரஜையும் அவருடன் இலங்கைக்கு வருகை தந்து மல்வானே– வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யவுள்ள இந்திய பிரஜையால் பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக குறித்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணையும் அவரது காதலனான இந்திய பிரஜையையும் பொலிஸார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கையில் தங்கியிருந்த காதலான இந்திய பிரஜையின் விசா செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை அவர் விசா நீடிப்பை பெற்றிருந்த நிலையில் குறித்த காலப்பகுதி முடிவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்திய பிரஜையை கைது செய்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





துபாயில் மலர்ந்த காதல். இலங்கை திரும்பிய காதலி- காதலன் கைது. இலங்கையை சேர்ந்த தனது காதலியை பார்வையிட வந்த இந்திய பிரஜையான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மல்வானே – வல்கம பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லீம் பெண்ணொருவர் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர்.இந்நிலையில் அங்கு  இந்திய பிரஜை ஒருவருக்கும்  இலங்கையை சேர்ந்த முஸ்லீம் பெண்ணிற்கும் காதல்  மலர்ந்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில் குறித்த பெண்  கடந்த ஜூன் 20ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.குறித்த பெண்ணின் காதலனான இந்திய பிரஜையும் அவருடன் இலங்கைக்கு வருகை தந்து மல்வானே– வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தார்.இந்நிலையில், தன்னை திருமணம் செய்யவுள்ள இந்திய பிரஜையால் பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக குறித்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.இதனையடுத்து பெண்ணையும் அவரது காதலனான இந்திய பிரஜையையும் பொலிஸார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்போது இலங்கையில் தங்கியிருந்த காதலான இந்திய பிரஜையின் விசா செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த ஜூலை 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை அவர் விசா நீடிப்பை பெற்றிருந்த நிலையில் குறித்த காலப்பகுதி முடிவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து இந்திய பிரஜையை கைது செய்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement