குருநாகல் அத்துகல மலையைப் பார்க்கச் சென்ற காதலர்கள் குறித்த காட்டை தீயிட்டு கொழுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பற்ற வைத்த தீக் குச்சியால் குறித்த அனர்தம் நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காதலர்கள் இருவரும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (19.08) உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதுகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக தம்பதியினர் இன்று காலை வந்துள்ளனர். இதன்போது குறித்த யுவதி தீ குச்சை பற்ற வைத்து காட்டின் இருபகுதியிலும் வீசியுள்ளார்.
இதனைபார்த்த மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பிரதேசத்தில் வசிக்கின்றனர். குறித்த இளைஞர் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் பகுதியில் காட்டை பற்ற வைத்த காதலர்கள் samugammedia குருநாகல் அத்துகல மலையைப் பார்க்கச் சென்ற காதலர்கள் குறித்த காட்டை தீயிட்டு கொழுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பற்ற வைத்த தீக் குச்சியால் குறித்த அனர்தம் நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காதலர்கள் இருவரும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (19.08) உத்தரவிட்டுள்ளது.குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதுகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக தம்பதியினர் இன்று காலை வந்துள்ளனர். இதன்போது குறித்த யுவதி தீ குச்சை பற்ற வைத்து காட்டின் இருபகுதியிலும் வீசியுள்ளார்.இதனைபார்த்த மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பிரதேசத்தில் வசிக்கின்றனர். குறித்த இளைஞர் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.