• Sep 21 2024

ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு நீதவான் நீதிமன்றம் பிணை..! SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 12:05 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சந்தேக நபர்கள் ஜூலை 6, 2022 அன்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு நீதவான் நீதிமன்றம் பிணை. SamugamMedia ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சந்தேக நபர்கள் ஜூலை 6, 2022 அன்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement