வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவை ஆதீனம் சார்பில் அச்சுவேலி, சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் பூரண கும்பம் வைத்து தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றார்.
அதனை தொடர்ந்து நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கோவில் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.முத்து ஸ்ரீநீவாக குருக்கள் மற்றும் திருநெல்வேலி
நீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் தேவஸ்த்தானம் சிவஸ்ரீ.சதா.சிவகுமாரக்குருக்கள், பிரம்மஸ்ரீ.சிவஆனந்தகிருஸ்ண சர்மா, ஆகியோர் மாலை அணிவித்து ஆதீனத்தை வரவேற்றனர்.
தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் மற்றும் நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கோவில் ஆலய அறங்காவலர்கள் மற்றும் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணை ஸ்தாபகர் கலாநிதி.அப்பையா தேவசகாயம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி ஆதீனத்தை வரவேற்றனர்.
மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா- பார்வையிட வந்த இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவை ஆதீனம் சார்பில் அச்சுவேலி, சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் பூரண கும்பம் வைத்து தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றார்.அதனை தொடர்ந்து நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கோவில் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.முத்து ஸ்ரீநீவாக குருக்கள் மற்றும் திருநெல்வேலிநீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் தேவஸ்த்தானம் சிவஸ்ரீ.சதா.சிவகுமாரக்குருக்கள், பிரம்மஸ்ரீ.சிவஆனந்தகிருஸ்ண சர்மா, ஆகியோர் மாலை அணிவித்து ஆதீனத்தை வரவேற்றனர்.தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் மற்றும் நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கோவில் ஆலய அறங்காவலர்கள் மற்றும் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணை ஸ்தாபகர் கலாநிதி.அப்பையா தேவசகாயம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி ஆதீனத்தை வரவேற்றனர்.