ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பொறுத்தவரையில் அந்த பக்கம் இருந்து நான் தான் வாக்களித்திருந்தேன். அந்த சட்டமூலத்தினூடாக எனக்குத்தான் அந்த சட்டத்தின் முதலாவது 3 வழக்குகள் ஆணைக் குழுவினால் போடப்பட்டது. 2016 இல் வாக்குமூலம் 2019 இல் வழக்கு என்ற விதமாக பிரித்துப் பிரித்து வழக்குப் போட்டிருக்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டு நான் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றுவந்த போது செய்தி வருகிறது சாமர சம்பத் கைது செய்யப்பட்டிருந்தார் என்று. ஆகவே ஒரு வழக்கு மூன்றாகப் பிரித்து வழக்கு போட்டிருந்தார்கள். அதன் பின்னர் தான் அந்த மூன்று வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கின் "செக்"கை (check) எடுத்துக் கொண்டு சென்று 30 ஆம் திகதி ஒரு முறைப்பாட்டை அந்த காசோலையை வைத்துக்கொண்டு செய்திருக்கிறார்கள்.
4000 வழக்குகள் தேங்கி இருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சாமர சம்பத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற மாதிரி வழக்குகளை துரிதப்படுத்தி இருக்கலாம் தானே. அதனால் தான் குறிப்பிட்டேன் மற்றவர்களுடைய காற்சட்டையை தங்களுடைய காற்சட்டை போல அணிந்து அழகாக பயணிக்கின்ற மனிதர்கள் இருக்கிறார்கள். ரணில் விக்ரமசிங்கவின் காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட சகல சட்டதிட்டங்களுக்கும் எங்களுக்கும் நாங்கள் ஆதரவளித்திருந்தோம்.
ஆகவே எந்த சட்டத்திற்கும் யார் வாக்கு வழங்காவிட்டாலும் சாமர சம்பத் ஆதரவாக வாக்களிப்பார். இன்று சாமர சம்பத்துக்கு ஏற்பட்ட நிலைமை போன்று மற்றவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டாம். பழி வாங்க வேண்டாம்.இந்த அரசாங்கம் மாறி அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்பொழுது ஒருமுறைமை இருக்க வேண்டும். அந்த முறைமையில் தான் நாம் பணியாற்ற வேண்டும்.அரசியல் பழிவாங்கலுக்கு ஒரு வரையறை வேண்டும். ஆகவே எங்களுக்கு ஒரு சட்டம் வேறொருவருக்கு இன்னொரு சட்டம் என்று இல்லை ஆகவே சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
சிறைச்சாலை தொடர்பாக நான் குறிப்பிடவேண்டி இருக்கிறது. சிறைச்சாலையில் இரவில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை தான் இருக்கிறது. நூற்றுக்கு 90விதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமாக பிடிபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிணையில்லாத ஒரு நிலைமை காணப்படுகிறது.
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தை சிறைச்சாலையில் முதலில் முன்னெடுங்கள். அங்கு இருக்கின்ற பணியாளர்கள் மிகவும் சிரமத்துடன் பணியாற்றுகிறார்கள். ஆகவே அந்த விடயங்களை நான் கூறக் கூடியதாக இருக்கிறது. என்னை இதன் மூலமாக வீழ்த்த முடியாது.
அவ்வாறான ஒரு சரித்திரம் சாமரசம்பத் என்பவரிடம் இல்லை. அந்த காலப்பகுதியிலேயே பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தவர் நான். ஆகவே இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை. நான் யாருக்கும் அஞ்சப் போவதுமில்லை. இந்த விடயத்தையும் ஞாபகப்படுத்தி விடைபெறுகிறேன். நன்றி, என்று தெரிவித்தார்.
காற்சட்டையை மாற்றிப்போடும் மனிதர்களால் என்னை அசைக்க முடியாது- பிணையில்வந்த சாமர சூளுரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பொறுத்தவரையில் அந்த பக்கம் இருந்து நான் தான் வாக்களித்திருந்தேன். அந்த சட்டமூலத்தினூடாக எனக்குத்தான் அந்த சட்டத்தின் முதலாவது 3 வழக்குகள் ஆணைக் குழுவினால் போடப்பட்டது. 2016 இல் வாக்குமூலம் 2019 இல் வழக்கு என்ற விதமாக பிரித்துப் பிரித்து வழக்குப் போட்டிருக்கிறார்கள். 2025 ஆம் ஆண்டு நான் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றுவந்த போது செய்தி வருகிறது சாமர சம்பத் கைது செய்யப்பட்டிருந்தார் என்று. ஆகவே ஒரு வழக்கு மூன்றாகப் பிரித்து வழக்கு போட்டிருந்தார்கள். அதன் பின்னர் தான் அந்த மூன்று வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கின் "செக்"கை (check) எடுத்துக் கொண்டு சென்று 30 ஆம் திகதி ஒரு முறைப்பாட்டை அந்த காசோலையை வைத்துக்கொண்டு செய்திருக்கிறார்கள். 4000 வழக்குகள் தேங்கி இருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சாமர சம்பத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற மாதிரி வழக்குகளை துரிதப்படுத்தி இருக்கலாம் தானே. அதனால் தான் குறிப்பிட்டேன் மற்றவர்களுடைய காற்சட்டையை தங்களுடைய காற்சட்டை போல அணிந்து அழகாக பயணிக்கின்ற மனிதர்கள் இருக்கிறார்கள். ரணில் விக்ரமசிங்கவின் காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட சகல சட்டதிட்டங்களுக்கும் எங்களுக்கும் நாங்கள் ஆதரவளித்திருந்தோம். ஆகவே எந்த சட்டத்திற்கும் யார் வாக்கு வழங்காவிட்டாலும் சாமர சம்பத் ஆதரவாக வாக்களிப்பார். இன்று சாமர சம்பத்துக்கு ஏற்பட்ட நிலைமை போன்று மற்றவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டாம். பழி வாங்க வேண்டாம்.இந்த அரசாங்கம் மாறி அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்பொழுது ஒருமுறைமை இருக்க வேண்டும். அந்த முறைமையில் தான் நாம் பணியாற்ற வேண்டும்.அரசியல் பழிவாங்கலுக்கு ஒரு வரையறை வேண்டும். ஆகவே எங்களுக்கு ஒரு சட்டம் வேறொருவருக்கு இன்னொரு சட்டம் என்று இல்லை ஆகவே சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. சிறைச்சாலை தொடர்பாக நான் குறிப்பிடவேண்டி இருக்கிறது. சிறைச்சாலையில் இரவில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை தான் இருக்கிறது. நூற்றுக்கு 90விதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமாக பிடிபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிணையில்லாத ஒரு நிலைமை காணப்படுகிறது.கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தை சிறைச்சாலையில் முதலில் முன்னெடுங்கள். அங்கு இருக்கின்ற பணியாளர்கள் மிகவும் சிரமத்துடன் பணியாற்றுகிறார்கள். ஆகவே அந்த விடயங்களை நான் கூறக் கூடியதாக இருக்கிறது. என்னை இதன் மூலமாக வீழ்த்த முடியாது. அவ்வாறான ஒரு சரித்திரம் சாமரசம்பத் என்பவரிடம் இல்லை. அந்த காலப்பகுதியிலேயே பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தவர் நான். ஆகவே இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை. நான் யாருக்கும் அஞ்சப் போவதுமில்லை. இந்த விடயத்தையும் ஞாபகப்படுத்தி விடைபெறுகிறேன். நன்றி, என்று தெரிவித்தார்.