• Feb 17 2026

வட்டுக்கோட்டையில் மகாகவி பாரதியின் பிறந்தாள் நிகழ்வு!

dileesiya / Dec 11th 2025, 4:10 pm
image

மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தாள் நிகழ்வானது இன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் நடைபெற்றது

இதன்போது மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தப்பட்டது.

இந்த நிகழ்வு சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்றது.

மகாகவி பாரதியார் பெண் விடுதலை, சாதிய எதிர்ப்பு, சமத்துவம் என்பவற்றை வலியுறுத்தி  கடுமையாக போராடினார்.

பாரதி  பல மொழிகளில் புலமை பெற்ற போதும்  தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தார். 

இவரது படைப்புகள் அரசியல், சமூக, ஆன்மீகக் கருப்பொருள்களை உள்ளடக்கியதாக விளங்கின. 

பாரதி இயற்றிய பாடல்களும், கவிதைகளும் தமிழின் இலக்கியம், இசை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


வட்டுக்கோட்டையில் மகாகவி பாரதியின் பிறந்தாள் நிகழ்வு மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தாள் நிகழ்வானது இன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் நடைபெற்றதுஇதன்போது மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தப்பட்டது.இந்த நிகழ்வு சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்றது.மகாகவி பாரதியார் பெண் விடுதலை, சாதிய எதிர்ப்பு, சமத்துவம் என்பவற்றை வலியுறுத்தி  கடுமையாக போராடினார்.பாரதி  பல மொழிகளில் புலமை பெற்ற போதும்  தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தார். இவரது படைப்புகள் அரசியல், சமூக, ஆன்மீகக் கருப்பொருள்களை உள்ளடக்கியதாக விளங்கின. பாரதி இயற்றிய பாடல்களும், கவிதைகளும் தமிழின் இலக்கியம், இசை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.குறித்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement