ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
அதன்படி அவர்கள் இன்று (30) காலை தமது பதவிகளை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன ஐக்கிய பெரமுனவின் செயற்குழு கூட்டம் நேற்று (29) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
அக்கட்சியின் சின்னமாக நாற்காலி சின்னத்தை கொண்டு பரந்த கூட்டணியை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி அரசியலமைப்பில் திருத்தம் செய்து புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இங்கு 03 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்தவும் திலங்கவும் இராஜினாமா. ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.அதன்படி அவர்கள் இன்று (30) காலை தமது பதவிகளை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுஜன ஐக்கிய பெரமுனவின் செயற்குழு கூட்டம் நேற்று (29) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.அக்கட்சியின் சின்னமாக நாற்காலி சின்னத்தை கொண்டு பரந்த கூட்டணியை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.இதன்படி அரசியலமைப்பில் திருத்தம் செய்து புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும், இங்கு 03 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.