• Sep 08 2024

பல்கலைக்கழங்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..!samugammedia

Tharun / Feb 27th 2024, 7:34 pm
image

Advertisement

பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

 அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் கடந்த 20ஆம் திகதி என இடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அதேசமயம் நாளைமறுதினம்  (29) வியாழக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய இரு தினங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது. அத்துடன் நாளையத்தினம்  (28)புதன்கிழமை காலை 11.00 மணியளவில், யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் 29.02.2024 வியாழக்கிழமை கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் நடைபெறவுள்ள  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழங்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.samugammedia பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் கடந்த 20ஆம் திகதி என இடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அதேசமயம் நாளைமறுதினம்  (29) வியாழக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய இரு தினங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது. அத்துடன் நாளையத்தினம்  (28)புதன்கிழமை காலை 11.00 மணியளவில், யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் 29.02.2024 வியாழக்கிழமை கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் நடைபெறவுள்ள  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement