• May 11 2024

மஹிந்த- கோட்டாபய மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க முக்கிய நாடு முடிவு!

Sharmi / Jan 21st 2023, 10:07 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரி 10ஆம் திகதியன்று இந்த நான்கு பேர் மீதும் கனடா தடைகளை விதித்தது.

1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி, இந்த தடையை ஜி7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த- கோட்டாபய மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க முக்கிய நாடு முடிவு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2023 ஜனவரி 10ஆம் திகதியன்று இந்த நான்கு பேர் மீதும் கனடா தடைகளை விதித்தது.1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி, இந்த தடையை ஜி7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement