கண்டி - அக்குரணை 07 சந்தி பகுதியில் அமைந்துள்ள மரத்தொழிற்சாலையில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 05.00 மணியளவில் ஏற்பட்டது.
தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கண்டி தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இவ் விபத்தால் வர்த்தக நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரத்தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; அதிகாலையில் பெரும் பதற்றம் கண்டி - அக்குரணை 07 சந்தி பகுதியில் அமைந்துள்ள மரத்தொழிற்சாலையில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 05.00 மணியளவில் ஏற்பட்டது. தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கண்டி தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.இவ் விபத்தால் வர்த்தக நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.