• Mar 09 2026

கடும் வெப்பத்தால் வெகுவாக குறையும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் - தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Chithra / Mar 8th 2026, 9:23 am
image


மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.


குறிப்பாக மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 14 அடி குறைந்துள்ளது.  கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்துள்ளது. 


காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 18 அடி குறைந்துள்ளது. அத்துடன் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட வெகுவாக குறைந்துள்ளது.  மேலும் மத்திய மலைநாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் குறைந்துள்ளது. 


தொடர்ந்து இவ்வாறான காலநிலை நிலவும் பட்சத்தில் மத்திய மலைநாட்டில் சுத்தமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.


கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்க பகுதியில் உள்ள பற்றைகளுக்கும் சிறு சிறு வனப் பகுதிகளுக்கும் விஷமிகள் தீ வைத்ததின் காரணமாக நீர் ஊற்றுகள் வற்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சி கண்டு மின் துண்டிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 


கடும் வெப்பத்தால் வெகுவாக குறையும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் - தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.குறிப்பாக மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 14 அடி குறைந்துள்ளது.  கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 18 அடி குறைந்துள்ளது. அத்துடன் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட வெகுவாக குறைந்துள்ளது.  மேலும் மத்திய மலைநாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் குறைந்துள்ளது. தொடர்ந்து இவ்வாறான காலநிலை நிலவும் பட்சத்தில் மத்திய மலைநாட்டில் சுத்தமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்க பகுதியில் உள்ள பற்றைகளுக்கும் சிறு சிறு வனப் பகுதிகளுக்கும் விஷமிகள் தீ வைத்ததின் காரணமாக நீர் ஊற்றுகள் வற்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சி கண்டு மின் துண்டிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement