• Jun 30 2024

இலங்கையில் விபரீத முடிவெடுத்த மாலைத்தீவு பெண் வைத்தியர் - அதிக மாத்திரையால் பறிபோன உயிர்

Chithra / Jun 27th 2024, 3:04 pm
image

Advertisement


விடுமுறைக்காக இலங்கை வந்த மாலைத்தீவு பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை எல்விட்டிகல மாவத்தையில் உள்ள வீடொன்றில், வைத்து அதிகமான மாத்திரை உட்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29 வயதான அசிஹாக் நோன் சபியு என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 6ஆம் திகதி தனது 19 வயது சகோதரருடன் இலங்கைக்கு வந்துள்ளார்.

எல்விட்டிகல மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில்  குறித்த பெண், கடந்த 24ஆம் திகதி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு   சுகயீனமடைந்ததால், ​அவரின் சகோதரர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் வைத்தியர் நேற்று முன்தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பெண் ஏற்கனவே உயிரை மாய்க்க முயற்சித்த போதும் சகோதரனால் காப்பாற்றப்பட்ட நிலையிலேயே, மீண்டும் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று 2017 ஆம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலுக்கமைய, 2022 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற பின்னர் தனது சொந்த நாடான மாலைத்தீவுக்குச் சென்று அங்குள்ள வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார்.

மரணத்திற்கான காரணம் குறித்து பொரளை பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கையில் விபரீத முடிவெடுத்த மாலைத்தீவு பெண் வைத்தியர் - அதிக மாத்திரையால் பறிபோன உயிர் விடுமுறைக்காக இலங்கை வந்த மாலைத்தீவு பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொரளை எல்விட்டிகல மாவத்தையில் உள்ள வீடொன்றில், வைத்து அதிகமான மாத்திரை உட்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.29 வயதான அசிஹாக் நோன் சபியு என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் கடந்த 6ஆம் திகதி தனது 19 வயது சகோதரருடன் இலங்கைக்கு வந்துள்ளார்.எல்விட்டிகல மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தங்கியிருந்தனர்.இந்தநிலையில்  குறித்த பெண், கடந்த 24ஆம் திகதி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு   சுகயீனமடைந்ததால், ​அவரின் சகோதரர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளார்.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் வைத்தியர் நேற்று முன்தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்த பெண் ஏற்கனவே உயிரை மாய்க்க முயற்சித்த போதும் சகோதரனால் காப்பாற்றப்பட்ட நிலையிலேயே, மீண்டும் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த பெண் இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று 2017 ஆம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாரின் தகவலுக்கமைய, 2022 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற பின்னர் தனது சொந்த நாடான மாலைத்தீவுக்குச் சென்று அங்குள்ள வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார்.மரணத்திற்கான காரணம் குறித்து பொரளை பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement