• Apr 02 2025

Sharmi / Jun 27th 2024, 3:12 pm
image

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் வர்த்தக கண்காட்சி-2024  இன்றையதினம்(27) காலை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.

உலக நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் தினத்துடன் இணைந்த வகையில் இவ் வர்த்தக கண்காட்சியானது மக்கள் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளர்களின் பங்கேற்புடன் இக் கண்காட்சி  இடம்பெற்று வருகின்றது.

அந்த அடிப்படையில் குறித்த நிகழ்வில் கற்றாழை உற்பத்திகள், சலவை உற்பத்திகள், உணவுப் பொருட்கள், தோல்சார் உற்பத்தி பொருட்கள்,கைவினை உற்பத்தி பொருட்கள், கடல்சார் உலர் உணவுப் பொருட்கள், மட்பாண்ட உற்பத்தி பொருட்கள், ஆடை உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.



யாழில் ஆரம்பமான வர்த்தக கண்காட்சி. மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் வர்த்தக கண்காட்சி-2024  இன்றையதினம்(27) காலை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.உலக நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் தினத்துடன் இணைந்த வகையில் இவ் வர்த்தக கண்காட்சியானது மக்கள் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளர்களின் பங்கேற்புடன் இக் கண்காட்சி  இடம்பெற்று வருகின்றது.அந்த அடிப்படையில் குறித்த நிகழ்வில் கற்றாழை உற்பத்திகள், சலவை உற்பத்திகள், உணவுப் பொருட்கள், தோல்சார் உற்பத்தி பொருட்கள்,கைவினை உற்பத்தி பொருட்கள், கடல்சார் உலர் உணவுப் பொருட்கள், மட்பாண்ட உற்பத்தி பொருட்கள், ஆடை உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement