• Jun 30 2024

ஜூலை மாதம் 8,435 பேருக்கு நிரந்தர நியமனம்..!

Chithra / Jun 27th 2024, 3:16 pm
image

Advertisement

 

உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்து பிரதமரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியாற்றும் 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.

நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

அதன்படி, அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.


ஜூலை மாதம் 8,435 பேருக்கு நிரந்தர நியமனம்.  உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது குறித்து பிரதமரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியாற்றும் 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.அதன்படி, அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement