• Nov 26 2025

தொல்லியல் பெயர் பலகைகளை அகற்றிய ஒருவர் கைது - 7 சந்தேகநபர்கள் அடையாளம்

Chithra / Nov 25th 2025, 9:00 am
image

 

மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள், பிரதேச சபையால் அகற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மட்டக்களப்பு - கிரான் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவங்கள் தொடர்பில், 7 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் அடங்குவதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, சந்தேகநபர்களால் அகற்றப்பட்ட பெயர் பலகைகளும் வாழைச்சேனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்லியல் பெயர் பலகைகளை அகற்றிய ஒருவர் கைது - 7 சந்தேகநபர்கள் அடையாளம்  மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள், பிரதேச சபையால் அகற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - கிரான் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில், 7 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் அடங்குவதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்களால் அகற்றப்பட்ட பெயர் பலகைகளும் வாழைச்சேனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement