• Sep 04 2026

பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியவர் கைது

Aathira / Sep 4th 2026, 9:28 am
image

பெண்ணொருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அனுமதியின்றி பரப்பிய குற்றச்சாட்டில் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவினரால், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், முறைப்பாட்டாளரை திருமணம் செய்து பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியவர் கைது பெண்ணொருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அனுமதியின்றி பரப்பிய குற்றச்சாட்டில் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவினரால், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், முறைப்பாட்டாளரை திருமணம் செய்து பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement