• Dec 09 2024

நபரொருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவர் கைது..! மஹரகம நகரில் பதற்றம்

Chithra / Jun 30th 2024, 9:38 am
image

 

கொழும்பு - மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பெரும் பிரயத்தனப்பட்டு அவரை கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து சில போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 

அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நபரொருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவர் கைது. மஹரகம நகரில் பதற்றம்  கொழும்பு - மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பெரும் பிரயத்தனப்பட்டு அவரை கைது செய்தனர்.சந்தேகநபரிடம் இருந்து சில போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கத்திக்குத்து இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement