• Sep 29 2024

கரைத்தீவு கடற்கரைப் பகுதியில் பெருமளவு பீடி இலைகளுடன் ஒருவர் கைது! samugammedia

Chithra / Jul 2nd 2023, 12:53 pm
image

Advertisement

ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கற்பிட்டி விஜய கடற்படையினர் இன்று அதிகாலை பீடி இலைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கடல் வழியாக சட்டவிரோதமான பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்து குறித்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது கரைத்தீவு கடற்கரைப் பகுதியில் வைத்து பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

65 உரைகளில் சுமார் 1947 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

புத்தளம் கரைத்தீவு பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.


கரைத்தீவு கடற்கரைப் பகுதியில் பெருமளவு பீடி இலைகளுடன் ஒருவர் கைது samugammedia ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கற்பிட்டி விஜய கடற்படையினர் இன்று அதிகாலை பீடி இலைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கடல் வழியாக சட்டவிரோதமான பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்து குறித்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது கரைத்தீவு கடற்கரைப் பகுதியில் வைத்து பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.65 உரைகளில் சுமார் 1947 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.புத்தளம் கரைத்தீவு பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென கடற்படையினர் தெரிவித்தனர்.குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement