• Nov 25 2024

இரண்டு நாட்களாக உணவில்லை - பசியை போக்க பாக்கு மரத்தில் ஏறியவர் பரிதாப மரணம்..!

Chithra / Jan 15th 2024, 12:46 pm
image

 

இரண்டு நாட்களாக எவ்விதமான உணவும் உட்கொள்ளாது பட்டினியால் வாடிய நபரொருவர், பாக்கு மரத்திலேறி பாக்கு திருட முற்பட்டவேளையில் மரத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார்.

இச்  சம்பவம் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.

கடுகண்ணாவை - கம்பளை வீதியில் நாவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய மாரிமுத்து மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர், திருமணமாகாதவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாவுல்ல பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பாக்கு மரத்தில் ஏறிகொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் ஏ.பி. ஜெயசூரிய சடலத்தின் தடயவியல் பரிசோதனையின் போது உயிரிழந்தவர் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை என தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்களாக உணவில்லை - பசியை போக்க பாக்கு மரத்தில் ஏறியவர் பரிதாப மரணம்.  இரண்டு நாட்களாக எவ்விதமான உணவும் உட்கொள்ளாது பட்டினியால் வாடிய நபரொருவர், பாக்கு மரத்திலேறி பாக்கு திருட முற்பட்டவேளையில் மரத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார்.இச்  சம்பவம் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.கடுகண்ணாவை - கம்பளை வீதியில் நாவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய மாரிமுத்து மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், திருமணமாகாதவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.நாவுல்ல பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பாக்கு மரத்தில் ஏறிகொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டது.கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் ஏ.பி. ஜெயசூரிய சடலத்தின் தடயவியல் பரிசோதனையின் போது உயிரிழந்தவர் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement